--- --:--:-- --

அறுபதடி ஆழத்தில் விழுந்த நபரை மீட்ட தீயணைப்புத்துறை.!

7

ன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் சுற்றுவட்டாரத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. வடபகுதியில் உள்ள அறுபதடி ஆழத்தில் இருந்து ஒருவர் அபாயக் குரலெழுப்பும் சத்தம் கேட்டது.

 

எட்டி பார்த்தபோது உள்ளே முட்புதரை கட்டிப்பிடித்தபடி ஒருவரின் சத்தம் கேட்டதாக உடனடியாக மக்கள் மார்த்தாண்டம் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் கயிறு கட்டி கீழே இறங்கி அந்த முதியவரை மீட்டு கரை சேர்த்தனர்.

 

விசாரணையில் முதியவர் வாய் பேச முடியாதவர் என்பது தெரியவந்தது. பின்னர் அந்த முதியவரை தீயணைப்பு துறையினர் சமூகநலத் துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். முதியவரை தீயணைப்பு துறையினர் மீட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Right Menu Icon