சென்ட்ரலில் இருந்து மும்பைக்கு சென்ற ரயிலில் தீ விபத்து..!
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து மும்பைக்கு சென்ற பயணிகள் விரைவு ரயிலில் புகை ஏற்பட்டதால் நடுவழியில் நிறுத்தப்பட்டது. வியாசர்பாடி ரயில் நிலையத்திற்கு இடையே சென்ற பொழுது உயிர் அழுத்த மின்கம்பியில் மின் கசிவு ஏற்பட்டதன் விளைவாக இந்த விபத்து ஏற்பட்டது.
முதல் பெட்டியில் புகை சூழ்ந்ததால் பயணிகள் கூச்சலிட்டனர். ரயில் ஓட்டுநர் துரிதமாக செயல்பட்டு ரயிலை நிறுத்தியதால் பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேறினர்.
தீ விபத்து ஏற்படவில்லை என்றும் கப்லரில் ஏற்பட்ட பிரச்சனையால் புகை ஏற்பட்டுள்ளது எனவும் ரயில்வே நிர்வாகம் விளக்கமளித்துள்ளது. இதற்கிடையே பழுது நீக்கப்பட்டு ரயில் புறப்பட்டு சென்றது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





