--- --:--:-- --

சிங்கப்பூர் ஹோட்டலை சின்னாபின்னம் ஆக்கிய கும்பல்..!

3

ன்னார்குடியில் மாமூல் தராததால் ஹோட்டலை சூறையாடிய வழக்கில் இரண்டு பேர் காவல் நிலையத்தில் சரணடைந்தனர். வ.உ.சியில் வெங்கடேஷ் என்பவர் நடத்தி வரும் சிங்கப்பூர் பரோட்டா கடையில் 19ஆம் தேதி மூன்று பேர் கொண்ட கும்பல் அரிவாளால் தாக்குதல் நடத்தி பொருட்களை சேதப்படுத்தியதுடன் ஹோட்டலில் சாப்பிட்டு கொண்டு இருந்தவரையும் வெட்டி காயப்படுத்தியதாக கூறப்படுகிறது.

 

இதுகுறித்து மன்னார்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் தப்பி ஓடியதாக கூறப்படும் நபர்கள் காவல் நிலையத்தில் சரணடைந்தனர். அவர்களை கைது செய்த போலீசார் தலைமறைவான விக்கி என்பவரை தேடி வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon