--- --:--:-- --

முதலாமாண்டு மருத்துவக்கல்லூரி மாணவர்களின் கைரேகைகள் பதிவு

images

தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களின் கைரேகைகளை பதிவு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து மாணவர்கள் பலர் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளிச்சத்திற்கு வந்தது. இந்நிலையில் இந்த ஆண்டு கல்லூரியில் சேர்ந்த மாணவர்களின் சான்றிதழ்களை மீண்டும் சரிபார்க்க வேண்டும் என மருத்துவக் கல்வி இயக்ககம் உத்தரவிட்டது.

 

இதனையடுத்து தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் பயிலும் போது மாணவர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு வருகின்றன. மேலும் மாணவர்களின் இரண்டு கைகளையும் பதிவு செய்யப்படுகின்றன இந்த பணி நாளையும் நடைபெறும் என்று கூறப்படுகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon