--- --:--:-- --

பட்ஜெட் தொடர்பாக நிபுணர்களுடன் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனை..!

5

ட்ஜெட் தொடர்பாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பல்துறை வல்லுநர்கள் நடத்திவந்த ஆலோசனை கூட்டங்கள் நிறைவடைந்துள்ளன. கொரொனா பெருந்தொற்று காரணமாக பொருளாதாரம் மீட்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் பட்ஜெட் தயாரிக்கும் பணிகளை நிர்மலா சீதாராமன் ஈடுபட்டு வந்தார்.

 

கடந்த 16ஆம் தேதி தொடங்கிய ஆலோசனைக் கூட்டங்களில் பல்வேறு துறைகளை சேர்ந்த 170 நிபுணர்கள் பங்கேற்ற கருத்து தெரிவித்திருந்தனர். மொத்தம் 15 கூட்டங்கள் நடத்தப்பட்டு ஆலோசனைகள் பெறப்பட்டன.

 

நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தயாரிக்கும்போது நிபுணர்கள் கூறிய ஆலோசனைகளை கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படும் என்று மத்திய அரசு வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon