கெட்டவன்னு பேரெடுத்த நல்லவன்டா படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடக்கம்..!
மகத் நடிக்கும் கெட்டவன்னு பேரெடுத்த நல்லவன்டா படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் சிலம்பரசனின் ரசிகராக அவரின் நண்பர் மகத் நடிக்கும் படம் கெட்டவன்னு பேரெடுத்த நல்லவன்டா நகைச்சுவையை மையமாக கொண்டு உருவாகும் இந்தப் படத்தை பிரபு ராம் என்பவர் இயக்குகிறார்.
அதில் யோகிபாபு, ஐஸ்வர்யா தத்தா ,சாக்ஷி அகர்வால் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். கொரொனா காரணமாக நிறுத்தப்பட்டிருந்த படப்பிடிப்பு தற்போது மீண்டும் தொடங்கிய நிலையில் யோகி பாபு நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.







