ஊரடங்கு காரணமாக நிறுத்தப்பட்ட கே ஜி எஃப் 2 படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடக்கம்…!
கொரொனா ஊரடங்கு காரணமாக நிறுத்தப்பட்ட கே ஜி எஃப் 2 படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியுள்ளது. இந்தியாவில் கடந்த 5 மாதங்களுக்கு மேலாக ஊரடங்கு அமலில் இருப்பதால் படப்பிடிப்புக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் திரைப்படங்களின் படப்பிடிப்புக்கு மத்திய அரசு அண்மையில் அனுமதி வழங்கியது. இதையடுத்து கன்னடம், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் உருவாகும் கே ஜி எஃப் 2 படத்தின் படப்பிடிப்பு இன்று மீண்டும் தொடங்கியுள்ளது.
அதில் நடிகர் பிரகாஷ்ராஜ் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்படுகின்றன. அந்த புகைப்படத்தை வெளியிட்டு இருக்கும் பிரகாஷ்ராஜ் படப்பிடிப்பு வேலைகளுக்கு திரும்பி இருப்பதாக தெரிவித்துள்ளார். இந்த படத்தை தொடர்ந்து இன்னும் சில படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.






