--- --:--:-- --

விமானத்தில் ஸ்லீப்பர் பர்த்தால் சீட்டுக்கு சண்டை..!

22

விமானத்தில் பயணிப்போர் தங்கள் இருக்கையை ஸ்லீப்பர் பர்து போல கருதி பின்னால் இருப்பவர்களுக்கு தொந்தரவு அளிக்கக்கூடாது என்று விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

 

அமெரிக்கா ஏர்லைன்ஸ் விமானம் ஒன்றின் முன்னால் இருந்த பெண்மணி தனது இருக்கையை பின்பக்கம் சரிந்ததால் கோபமடைந்த பின்வரிசை பயணி ஆத்திரத்துடன் அந்த இருக்கையை பலமுறை குத்திய காட்சி இணையத்தில் வைரல் ஆனது. இதனால் விமானங்களின் சாயும் இருக்கைகள் தேவையா? வேண்டாமா? என்ற விவாதம் எழுந்துள்ளது.

 

இந்தநிலையில் இருக்கையை பின்னால் சாய்த்தது என்பதை ஒரு ஆச்சாரமாக கருதாமல் நாகரீகமாக நடந்து கொள்ள வேண்டும் என்று விமான போக்குவரத்து அமைச்சகம் டுவிட்டரில் கூறியுள்ளது. அதையும் மீறி இருக்கையை சாய்க்க விரும்பினால் பின்னால் இருப்பவர்களையும் ஒரு கணம் மனதில் நினைத்து கொள்ளுமாறு அறிவுரையும் விடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon