உரத் தொழிற்சாலை விவகாரம்.. சாலை மறியல் செய்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
மதுரை திருமங்கலம் அருகே இன்று வரும் தனியார் உரத் தொழிற்சாலையை மூடக்கோரி, சாலை மறியலில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.
மதுரை கள்ளிகுடி தாலுகா கே.சென்னம்பட்டியில் உள்ள தனியார் உர தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கழிவுகளால் பொதுமக்களும் உடல் நல பாதிக்கப்படுவதாக புகார் தெரிவித்து, மூடக்கோரி ஓடைப்பட்டி, மேலப்பட்டி, பேய்குளம், மாவீரன் பட்டி கிராம மக்கள் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நடவடிக்கை எடுக்க கோரி முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் மதுரை ஆட்சியருக்கு கடிதம் எழுதினார். இதனைத் தொடர்ந்து தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆய்வு செய்து முடிவுகள் வரும் வரை தற்காலிகமாக தொழிற்சாலையும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
மாசு கட்டுப்பாட்டு வாரிய மண்டல பொறியாளர் குணசேகரன் வழிகாட்டுதல் நடைமுறைகளை முறையாக பின்பற்றுவதாக அரசு தெரிவித்தார்.
தொழிற்சாலையை நிரந்தரமாக மூட கோரி முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விருதுநகர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பள்ளிக்கூடம் சந்திப்பில் பொதுமக்களோடு சாலை மறியலில் ஈடுபட்டார். இதை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் 50க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.





