கிடப்பில் போடப்பட்ட தார் சாலை.. அரசு பேருந்து வர மறுப்பதாக பொதுமக்கள் புகார்..!
மதுரை மேலூர் அருகே புதிய தார் சாலை அமைக்கும் பணியில் திடீர் தொய்வு ஏற்பட்டதால் வாகனங்கள் செல்ல முடியாமல் மக்கள் அவதி அடைந்துள்ளனர். மேலூர் அருகே உள்ள திருச்சி சாலை குண்டும் குழியுமாக சிதலமடைந்து இருந்தது.
இதனையடுத்து கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியம் மூலம் புதிய பாடசாலை அமைப்பதற்காக கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில் தார் சாலை பணிகள் கிடப்பில் போடப்பட்டதால் ஜல்லிக்கட்டு சாலை அப்படியே இருப்பதால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இது தவிர இந்த பகுதிக்கு அரசு பேருந்து வர மறுப்பதாகவும் தினமும் சிரமம் அடைவதாகவும் தெரிவிக்கின்றனர். இது குறித்து கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றிய அதிகாரியிடம் கேட்டபொழுது சாலை பணிகள் அமைப்பதற்கு முறையான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் காலதாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் ஒரு வாரத்திற்குள் புதிய தார்சாலை அமைக்கும் பணி முழுமை அடையும் எனவும் திருப்பித்தனர்.





