அரை மணி நேரத்தில் 134 உணவு வகைகளை செய்து பெண் சாதனை..!
மதுரை திருமங்கலத்தில் அரை மணி நேரத்தில் 134 உணவு வகைகளை செய்த பெண் ஒருவர் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார். திருமங்கலத்தை சேர்ந்த இந்திரா ரவிச்சந்திரன் என்பவர் சமையலில் புதிய சாதனை படைக்க வேண்டும் என்ற முயற்சியை மேற்கொண்டுள்ளார்.
அதன்படி இந்த வகை உணவுகளை தயார் செய்து காட்ட வேண்டும் என திருமண ஏற்பாடுகளை செய்தார். பல்வேறு வகை தோசை மற்றும் ஐஸ்கிரீம் கேக் வகைகளை அரை மணி நேரத்தில் செய்து சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். ஒரு மணி நேரத்தில் 122 உணவு வகைகள் சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.







