--- --:--:-- --

முந்தைய படங்களால் குற்ற உணர்ச்சி – நடிகர் அஜித்

3

னது முந்தைய படங்கள் சில தன்னை குற்ற உணர்ச்சிக்கு உள்ளாக்கியதாக நடிகர் அஜித்குமார் பேசியிருக்கிறார்.
த்மபூஷன் விருது வென்றபின் ஆங்கிலத் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த அஜித்குமார் தனது திரைப்பயணம் தொடர்பாக பேசியிருக்கிறார். அதில், “வாலி திரைப்படம் எப்போதும் என் மனதுக்கு நெருக்கமான படம்.

 

மக்கள் என்னை அந்தப் படத்தில்தான் சீரியஸ் நடிகராக பார்க்க ஆரம்பித்தனர் என்று நம்புகிறேன். அதற்கு முன்பு நிறைய அன்பு எனக்கு கிடைத்ததாலும், எனக்கு பல கதவுகள் திறக்க காரணமாக அமைந்தது வாலி திரைப்படம் தான்” என்று அஜித் கூறியிருக்கிறார்.நடிகர்களுக்கு இருக்க வேண்டிய சமூக பொறுப்பு குறித்து பேசிய அஜித், “என்னுடைய சில முந்தைய படங்கள் என்னை குற்ற உணர்ச்சிக்கு உள்ளாக்கின.

 

அதுவே நான் பிங்க் ரீமேக்கில் நடிக்க காரணம். முந்தைய படங்களில் பெண்களை ஸ்டாக்கிங் செய்வதை ஊக்குவிப்பதை போல உணர்ந்ததால் பிங்க் ரீமேக்கில் நடித்தேன். சில நேரங்களில் நாம் திரையில் செய்வதை மக்கள் பின்பற்ற விரும்புகிறார்கள். அதனால், பிங்க் ரீமேக்கில் நடிப்பது என்னுடைய முந்தைய படங்களுக்கு பிராயச்சித்தமாக இருக்கும் என்று நினைத்ததால் அதனை செய்தேன்.” எனக் கூறினார்.

 

மேலும் பேசிய அஜித், ”வாழ்க்கையைப் பற்றி குறை சொல்பவர்களை பார்க்கிறேன். காலை எழுந்ததும், உயிரோடு இருப்பதே பெரிய வரம். நான் தத்துவம் பேச விரும்பவில்லை. ஆனால், எனக்கு நிறைய காயங்கள், அறுவை சிகிச்சைகள் நடந்தன. புற்றுநோயிலிருந்து தப்பிய எனது குடும்ப உறுப்பினர்கள் நண்பர்கள் உள்ளார்கள். எனவே, உயிரோடு இருப்பதே எவ்வளவு மதிப்புமிக்கது என்பது எனக்குத் தெரியும்.

 

அதனால் தான் என் வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியையும் பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறேன்.” என்றும் கூறியிருக்கிறார்.ரேஸிங் தொடர்பாக பேசிய அஜித், “மோட்டார் ஸ்போர்ட்ஸ் மிகவும் விலை உயர்ந்த விளையாட்டு என எனது தந்தை கூறினார். மேலும் அவரால் நிதி உதவி செய்ய முடியாவிட்டாலும் என்னை தடுக்க மாட்டேன் என்றார்.

 

மோட்டார் ஸ்போர்ட்ஸ் மீது எனக்கு இருக்கும் ஆர்வத்தை அறிந்த எனது தந்தை எனக்கான வழியை நானே கண்டுபிடிக்க வேண்டும் என்றார்.விதி, நான் ரேஸ் டிராக்கில் இருந்த போது, மாடலிங் துறையை சேர்ந்த ஒருவர் என்னை அணுகி விசிட்டிங் கார்டு கொடுத்தார். ‘உங்களுக்கு மாடலிங் மீது ஆர்வம் இருந்தால், எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்’ என்று அவர் விசிட்டிங் கார்டு கொடுத்துவிட்டு சென்றபோது நான் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

 

முயற்சி செய்து பார்க்கலாம் என்று நினைத்த எனக்கு என்ன நடக்கிறது என்று புரிவதற்குள் வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தன. பின்னர் பிரிண்ட் விளம்பரங்கள், டிவி விளம்பரங்கள், மாடலிங் மூலமாக சம்பாதித்த பணம் அனைத்தையும் என் ரேஸிங் செய்ய செலவு செய்வேன்.” என்று ஆரம்பகால கட்டம் குறித்து அஜித் மனம் திறந்துள்ளார்.

Right Menu Icon