மகனை வெட்டிக்கொன்ற தந்தை..!
கோவில்பட்டி அருகே போதையில் மகனை மண்வெட்டியால் வெட்டி கொலை செய்த தந்தை சரண் அடைந்தார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள பகுதியைச் சேர்ந்தவர் இவர். இவரது மகன் கொத்தனார் வேலை செய்து வந்தார். இவருக்கு கற்பகம் என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளன.
பாலமுருகனுக்கும் அவரது தந்தைக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று இரவு தந்தையும் மகனும் சேர்ந்து மது அருந்தியதாக தெரிகிறது. அப்பொழுது இருவருக்கும் இடையில் ஏற்பட்ட தகராறு ஏற்பட்டுள்ளது .பின்னர் இருவரும் தூங்கச் சென்றனர்.
அதிகாலையில் தூங்கிக் கொண்டிருந்த மோகன் பாலமுருகனின் கழுத்து மற்றும் தலைப்பகுதியை மண் வெட்டியால் வெட்டியுள்ளார். இதில் பாலமுருகன் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தான்.
தகவல் அறிந்து வந்த கோவில்பட்டி மேற்கு போலீசார் பாலமுருகன் உடலை கைப்பற்றி பிரத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.





