தந்தை – மகன் மோதல்.. 3 காவலர்கள் ஆயுதப்படைக்கு மாற்றம்..!
திருச்சியில் வழக்கறிஞர் சங்க தலைவரும், அவரது மகனும் சாலையில் மோதி கொண்ட சம்பவத்தில் நடவடிக்கை எடுக்க தாமதப்படுத்திய எஸ்ஐ உட்ட மூன்று காவலர்கள் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளனர். திருச்சி மாவட்டம் மணப்பாறை நீதிமன்ற வழக்கறிஞர் சங்க தலைவராக உள்ள மோகன் தாசுக்கும் அவரது மகன் தீபனுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
சாலையில் மோதலில் ஈடுபட்ட இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதுடன் கடைகள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். தடுக்க முயன்ற போலீஸ் யாரையும் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் மோதல் சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ள நிலையில் போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்காமல் காலதாமதம் செய்த புகாரில் எஸ்ஐ உள்ளிட்ட மூன்று காவலர்கள் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.





