--- --:--:-- --

ஜூன் 1 முதல் விமானங்களில் கட்டண உயர்வு அமல்..!

3

ந்தியாவில் உள்நாட்டு விமானப் போக்குவரத்துக் கட்டணங்களை விமான போக்குவரத்து அமைச்சகம் உயர்த்தியுள்ளது. இந்த கட்டண உயர்வு வரும் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

 

கொரொனா பரவலின் தாக்கம் காரணமாக கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்து வரும் விமான நிறுவனங்களுக்கு உதவ கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன.

 

இதன்படி 40 நிமிடங்களுக்கு குறைவான பயணநேரம் கொண்ட விமானங்களுக்கான குறைந்த பட்ச கட்டணம் 2,300 ரூபாயிலிருந்து 13% அதிகரிக்கப்பட்டு 2600 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

 

இதேபோல் 40 நிமிடம் முதல் 60 நிமிடம் வரை பயண நேரம் கொண்ட விமானங்களுக்கான குறைந்தபட்ச கட்டணம் 2900 ரூபாய், 3 ஆயிரத்து 300 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

 

கடந்த ஆண்டு கொரொனா பரவலுக்கு பின்னர் மே மாதம் 25ஆம் தேதி விமான போக்குவரத்து தொடங்கியபோது முதல் விமான பயண நேரத்தின் அடிப்படையில் குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டது.

 

இதையடுத்து கடந்த பிப்ரவரியில் குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச கட்டணங்கள் 30% வரை உயர்த்தப்பட்டன. தற்போது குறைந்தபட்ச கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன.

Leave a Reply

Right Menu Icon