” என்னைத் திருமணம் செய்து கொள்கிறீர்களா ” கீர்த்தி சுரேஷ்க்கு ரசிகர் கொடுத்த லெட்டர்..!
நடிகையின் மகளான கீர்த்தி சுரேஷிற்கு தமிழிலும், தெலுங்கிலும் பிரபல ரசிகர் பட்டாளம் உண்டு. இவர் பென்குயின் என்ற படத்தில் நடித்தார். அது ஓடிடி தளத்தில் வெளியானது. இந்த படத்துக்கு மிகுந்த எதிர்பார்ப்புகள் இருந்தபோதிலும் இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.
கீர்த்தி சுரேஷ் ரஜினி நடிக்கும் அண்ணாத்த படத்திலும் இணைந்துள்ளார். ஆனால் கொரொனா ஊரடங்கால் இந்த படத்தின் படப்பிடிப்பு முற்றிலும் தடைபட்டுள்ளது. இந்த நிலையில், விஜய்யின் பிறந்தநாள் அன்று குட்டி ஸ்டோரி பாடலுக்கு அவர் வயலின் இசைத்து வெளியிட்ட காட்சிகள் வைரளாகின.
பொதுவாக நகைக்கடை ஜவுளிக்கடை விளம்பரங்களுக்கு நடிகர்களும் நடிகைகளும் சென்று கடை திறப்பு விழாவிற்கு வருகை தருவது வழக்கம். அதுபோல கீர்த்தி சுரேஷ் நகைக்கடை திறப்பு விழாவிற்கு சென்று இருந்தார். அப்போது கூட்டத்தில் இருந்த அவரது ரசிகர் ஒருவர் திடீரென கீர்த்திசுரேஷ் முன்னால் வந்து ஒரு அழகான போட்டோ ஆல்பத்தையும் ஒரு கடிதத்தையும் கொடுத்துவிட்டு சென்றுள்ளார்.
அதைப் பிரித்துப் பார்த்து கீர்த்திசுரேஷ் எதுவும் பேசாமல் மௌனமாக இருந்துள்ளார். ஏனெனில் அந்தக் கடிதத்தில் அந்த நபர் என்னைத் திருமணம் செய்து கொள்கிறீர்களா என எழுதி இருந்தாராம். யாரென தெரியாத நபர் இப்படியான ஒரு கடிதத்தை கொடுத்து இருந்தது இந்த தருணத்தை வாழ்வு நினைவுகளில் வைத்திருக்கிறாராம் கீர்த்தி சுரேஷ்.







