பிரபல ரவுடியான கல்வெட்டு ரவி ஆந்திராவின் போலீசில் சிக்கினார்..!
பாஜகவில் இணைந்தார் பிரபல ரவுடியான கல்வெட்டு ரவி ஆந்திராவின் போலீசில் சிக்கினார். கல்வெட்டு ரவி மீது 5 கொலை வழக்கு உட்பட கொலை முயற்சி, வழிப்பறி, ஆட்கடத்தல் கட்டப்பஞ்சாயத்து என 50க்கும் மேற்பட்ட வழக்குகள் பல காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளன.
இவன் நிலுவையில் வழக்குகளுக்கு நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்து வந்ததால் அவனுக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. தனிப்படை போலீசார் அவரை தேடி வந்த நிலையில் ஆந்திராவில் பதுங்கி இருப்பதாக வந்த தகவலை அடுத்து சீராலா பகுதியில் அவரை போலீசார் கைது செய்தனர்.







