பிரபல கன்னட காமெடி நடிகர் மரணம்!
பிரபல கன்னட காமெடி நடிகர் பேங்க் ஜனார்தன் (75) காலமானார். உடல்நலக்குறைவால் பெங்களூரு மணிபால் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது.
1948-ல் பிறந்த ஜனார்தன், பேங்க்கில் பணியாற்றி, பின்னர் திரைத்துறைக்கு வந்ததால், அந்தப் பெயர் அவருக்கு வந்தது. தர்லே நன் மகா, கணேஷ் சுப்ரமணியா என 500-க்கும் மேற்பட்ட படங்களிலும், சின்னத்திரையிலும் நடித்துள்ளார்.






