பிரபல சுற்றுச் சூழலியல் செயல்பாட்டாளர் திஷா ரவி கைது..!
பெங்களூருவைச் சேர்ந்த பிரபல சுற்றுச் சூழலியல் செயல்பாட்டாளர் திஷா ரவி கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் இரண்டு செயற்பாட்டாளர்களுக்கு ஜாமீனில் வரமுடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
வேளாண் சட்டங்களுக்கு எதிராக தொடர் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் குடியரசு தினத்தன்று நடத்திய டிராக்டர் பேரணியில் வன்முறை வெடித்தது. காலிஸ்தான் ஆதரவாளர்களால் வன்முறை தூண்டப்பட்ட தாக குற்றம்சாட்டும் டெல்லி காவல்துறை டிவிட்டரில் உளவிய டூல்கேட்டை இதற்கு ஆதாரமாக தெரிவித்துள்ளனர்.
வேளாண் சட்டத்திற்கு எதிராக விவசாயிகள் எந்தவிதமான ஹேஸ்டெக் உருவாக்க வேண்டும், போராடும் விவசாயிகளுக்கு ஏன் ஆதரவளிக்க வேண்டும் என்பன போன்ற விபரங்கள் அடங்கியது தான் டூல்கேட். இதனை பகிர்ந்து தான் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக வெளிநாட்டை சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா ட்விட்டரில் கருத்து பதிவு செய்தார்.
பின்னர் அதனை அவர் நீக்கி விட்டார். ஆனால் இந்த டூல்கேட்டை எடிட் செய்து திஷா ரவி தன்னுடைய சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். இதையடுத்து அவர் மீது தேசத் துரோகம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
பெங்களூரு திஷா ரவியை காவல்துறையின் சைபர் பிரிவு அதிரடியாக கைது செய்தது. டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் 5 நாள் போலீஸ் காவலில் அனுப்பப்பட்டார். கர்நாடக மாநிலம் பெங்களூருவில் தனியார் கல்லூரியில் பட்டம் பெற்ற திஷா காலநிலை மாற்றம் தொடர்பாக ஃப்ரைட்டே ஃபார் ஃப்யூச்சர் இந்தியா என்ற விழிப்புணர்வு அமைப்பை நிறுவியவர்களில் ஒருவர்.
சுற்றுச்சூழலை காக்க வெள்ளிக்கிழமைகளில் பள்ளிகள் வேலை நிறுத்தம் என்ற போராட்டத்தை நடத்தியவர், மரம் நடுவது சுற்றுச்சூழல் விழிப்புணர்வு என்று சூழலியல் செயல்பாட்டாளராக பிரபலமானவர்.
போராட்டங்களுக்கு டூல்கேட் உருவாக்கியதும் இதனை பரப்பியதிலும் முக்கிய சதிகாரராக செயல்படுவதோடு இதற்காக வாட்ஸ்அப் குருப் உருவாக்கி பரப்பியது போல் ஜஸ்டிஸ் பவுண்டேஷன் என்ற காலிஸ்தான் ஆதரவு இயக்கத்துடன் இணைந்து இந்திய அரசுக்கு எதிராக கருத்துக்களை பரப்பியது என திஷா மீது காவல்துறை குற்றச்சாட்டுகளை முன்வைத்து உள்ளது.
குற்றச்சாட்டுகள் சமூக செயற்பாட்டாளர்கள் மும்பையை சேர்ந்த நிக்கிதா மற்றும் சாந்தன் ஆகியோரை காவல்துறையினர் ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரன்ட் உடன் தேடி வருகின்றனர். இவர்களில் நிகிதா கைதிலிருந்து 4 வாரங்களுக்கு அளிக்க கோரி உயர் நீதிமன்றத்தை நாடியுள்ளார்.






