பனிக்கட்டியை ஆசையுடன் கடித்து சாப்பிடும் செல்லப்பிராணி..!
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் வழக்கத்தைவிட குளிரும் பனிப்பொழிவும் அதிகமாக உள்ளது. இதனால் உற்சாகமடைந்த ஏழு வயதான சாம்ப்ராஸ் எனப்படும் விச்சின் பிரைஸ் இனத்தை சேர்ந்த நாய் தனது தோட்டத்தில் வைக்கப்பட்டுள்ள மேஜையில் உறைந்திருக்கும் ஐஸ்கட்டியை பிடித்து சாப்பிடும் காட்சிகள் ரசிக்க வைத்துள்ளது.
வெப்பத்தை மட்டுமே பார்த்து வளர்ந்த நாய்க்கு இந்த அனுபவம் புதியதாக இருப்பதாக அதன் உரிமையாளர் தெரிவித்திருக்கிறார்.






