பிரபல இயக்குனர் கே வி ஆனந்த் மாரடைப்பால் காலமானார்.!
பிரபல இயக்குனர் கே வி ஆனந்த் மாரடைப்பால் மரணம் அடைந்தார். சிவகார்த்திகேயனோடு ஒரு படத்தைத் தயாரிப்பதற்காக வும் இயக்குவதற்காகவும் அவர் தயாராகிக் கொண்டு இருப்பதாக சொல்லப்படுகிறது.
காப்பான் படத்தை முடித்த பிறகு அடுத்த கட்ட வேலைகளை தொடங்கியுள்ளார். சூர்யாவின் அயன், மாற்றான், மற்றும் கவண், காப்பான் படங்களையும் இயக்கியுள்ளார்.
காதல் தேசம், சிவாஜி, பாய்ஸ், செல்லமே, முதல்வர் உள்ளிட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். சிறப்பான ஒளி பதிவிற்காக தேசிய அளவில் பிரபலமானவர் கேவி ஆனந்த்.






