திமுக மாவட்ட செயலாளர்கள் , வேட்பாளர்கள் கூட்டம் இன்று நடைபெறும்..!
திமுக மாவட்ட செயலாளர்கள் , வேட்பாளர்கள் கூட்டம் இன்று நடைபெறும் என அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார் . அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை 5 மணிக்கு கூட்டம் நடைபெறும் என தெரிவித்திருக்கிறார்.
இதில் மாவட்ட செயலாளர்கள் மற்றும் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என துரைமுருகன் கேட்டுக்கொண்டுள்ளார்.
தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளில் திமுக ஆட்சி அமைக்கும் என கூறப்பட்டுள்ள நிலையில் இந்த ஆலோசனை நடைபெறுகிறது.






