கலெக்டர் பெயரில் போலி முகநூல் கணக்கு..அடுத்தடுத்த அனுப்பப்பட்ட மெசேஜ்..!
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் பெயரில் அவரது புகைப்படத்தை பயன்படுத்தி போலி முகநூல் கணக்கை தொடங்கிய மோசடி செய்தது குறித்து விசாரணை செய்து வருவதாக சைபர் கிரைம் போலீசார் தெரிவித்தனர்.
ராணுவத்தில் பணியாற்றி வரும் தமது நண்பரும் தமிழகத்தில் பணியிட மாற்றமாவதால் உபயோக பொருட்களை வாங்கிக் கொள்ளுமாறு ஆட்சியர் ஜெயசீலன் கூறுவது போல் முகநூல் பக்கத்தில் உரையாடிய அந்த நபர் மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.






