சென்னைக்கு வந்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பப் கோளாறு ..!
லண்டனிலிருந்து சென்னை வந்து கொண்டிருந்த பிரிட்டிஷ் ஏர்லைன்ஸ் விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டதால் அதிலிருந்து 317 பயணிகள் 5 மணி நேரமாக அவதி அடைந்தனர்.
தினமும் அதிகாலை 3.,30 மணிக்கு லண்டனில் இருந்து சென்னை வந்து விட்டு மீண்டும் அதிகாலை 5.30 மணிக்கு சென்னையில் இருந்து லண்டன் புறப்பட்டு செல்வது வழக்கம். இந்த விமானத்தில் இன்று லண்டன் செல்வதற்காக 317 பயணிகள் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு அதிகாலை 2.30 மணிக்கு முன்னதாகவே வந்துவிட்டனர்.
ஆனால் லண்டனில் இருந்து சுமார் 300 பயணிகளுடன் சென்னைக்கு வந்து கொண்டிருந்த பிரிட்டிஷ் ஏர்லைன்ஸ் விமான நிலையத்தின் கோளாறு ஏற்பட்டதால் விமானம் சவுதி அரேபியாவில் ரியாத் விமான நிலையத்தில் அவசரமாக தரை இறக்கப்பட்டது.
பின்னர் தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டு காலை 8:30 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. பின்னர் விமானம் சுத்தம் செய்யப்பட்டு 5 மணி நேரம் தாமதமாக இன்று காலை 10:30 மணிக்கு சென்னையில் இருந்து லண்டன் புறப்பட்டு சென்றது.
இதேபோன்று சென்னையிலிருந்து சிங்கப்பூர் செல்லும் எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம் தொழில் நுட்ப கோளாறு காரணமாக சிங்கப்பூரிலிருந்து தாமதமாக சென்னைக்கு வந்ததால் விமானம் சுமார் 4 மணி நேரம் தாமதமாக இன்று அதிகாலை 5.30 மணிக்கு சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு புறப்பட்டு சென்றது.






