பரபரப்பான நேரத்தில் விஜய் பேசியதாக வெளியான போலி ஆடியோ..!
கர்நாடகத்தை விமர்சிக்கும் வகையில் நடிகர் விஜய் பேசியது போல் சித்தரிக்கப்பட்ட போலி ஆடியோ சமூக வலைதளத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. தமிழகத்திற்கு தண்ணீர் தர கன்னட அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
சித்தா பட பிரமோஷன் நிகழ்ச்சியில் இருந்து நடிகர் சித்தார்த்தை அவர்கள் வெளியேற்றிய நிகழ்வு சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. இதற்கு கன்னட நடிகர்கள் மன்னிப்பு கோரிய நிலையில் தண்ணீர் தர மறுப்பதை கண்டிக்கும் வகையில் நடிகர் விஜய் பேசியதாக வெளியான ஆடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
இதில் நடிகர் விஜய் தனது நடிப்பில் வெளியாக இருக்கும் லியோ படத்தை கர்நாடகத்தில் வெளியிடப் போவதில்லை என்பது போல் கூறப்படுகிறது.






