மும்பையில் இருந்து கிளம்பிய விமானத்தில் வெடிகுண்டு..தரையிறங்கிய அதிர்ச்சி..!
மும்பையில் இருந்து புறப்பட்ட விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் அந்த விமானம் அவசரமாக வாரணாசி விமான நிலையத்தில் தனி ஒரு பாதையில் தரையிறக்கப்பட்டது.
மும்பை விமானத்தில் இருந்து விமான நிறுவனத்தின் விமானம் ஒன்று வாரணாசிக்கு புறப்பட்டது. அப்போது சமூக வலைதளம் வாயிலாக அந்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பாதுகாப்பு காரணங்களுக்காக தரையிறக்கப்பட்டது.
பின்னர் விமான பயணிகள் பணியாளர்கள் பத்திரமாக விமான நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் வெடிகுண்டு மிரட்டல் போலி என தெரிய வந்தது. இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.





