--- --:--:-- --

போலிப் பாசம் தமிழுக்கு பணமெல்லாம் சமஸ்கிருதத்துக்கு – முதல்வர்

2

டந்த 10 ஆண்டுகளில் தமிழ் உள்ளிட்ட செம்மொழிகளை விட சமஸ்கிருத வளர்ச்சிக்கு மட்டும் 17 மடங்கு அதிக நிதி ஒதுக்கியதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். செம்மொழிகளுக்கு மத்திய அரசு ஒதுக்கியுள்ள நிதி தொடர்பாக ஆங்கில நாளேடு ஒன்று தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் விவரம் கோரியுள்ளது.

 

அதில், கடந்த 2014-15 முதல் 2024-25 நிதியாண்டு வரை சமஸ்கிருதத்தை வளர்ப்பதற்கு மட்டுமே இரண்டாயிரத்து 532 கோடியே 59 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதே சமயம், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒடியா ஆகிய 5 செம்மொழிகளுக்கு அதே காலகட்டத்தில் ஒட்டுமொத்தமாக 147 கோடியே 56 லட்சம் மட்டுமே ஒதுக்கப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.

 

அதாவது, சமஸ்கிருதத்திற்கு சராசரியாக ஆண்டுதோறும் 230 கோடியே 24 லட்சம் ரூபாய் ஒதுக்கப்படும் நிலையில், மற்ற 5 மொழிகளுக்கு ஒட்டுமொத்தமாகவே ஆண்டுதோறும் 13 கோடியே 41 லட்சம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, நாட்டின் மக்கள்தொகையில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒடியா பேசும் மக்கள் சுமார் 22 விழுக்காடு உள்ள நிலையில், சமஸ்கிருதம் பேசுவோரின் எண்ணிக்கை மிக மிக சொற்ப அளவாக பதிவாகியுள்ளது.

 

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சமஸ்கிருதத்திற்கு கோடிக்கணக்கில் பணத்தை ஒதுக்கிவிட்டு, தமிழ் உள்ளிட்ட தென்மாநில மொழிகளுக்கு முதலைக் கண்ணீர் மட்டும் விடுவதாக விமர்சித்துள்ளார். தமிழுக்கு போலிப் பாசம், பணம் எல்லாம் சமஸ்கிருதத்திற்கு என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Right Menu Icon