--- --:--:-- --

ஹெல்மெட் அணியாவிட்டால் இரண்டாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்ற ஆணையை திரும்ப பெற வேண்டும்..!

4

ஹெல்மெட் அணியாவிட்டால் இரண்டாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்ற ஆணையை திரும்ப பெற வேண்டும் என அகில இந்திய வழக்கறிஞர் கூட்டமைப்பு தலைவர் சத்தியசீலன் வலியுறுத்தியுள்ளார்.

 

மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அகில இந்திய வழக்கறிஞர் கூட்டமைப்பு தலைவர் சத்தியசீலன் தென்னிந்திய மக்களை நீண்ட நாள் கோரிக்கையான உச்ச நீதிமன்றக் கிளையை சென்னையில் நிறுவ வேண்டுமெனவும் சென்னை மற்றும் மதுரை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

 

ஹெல்மெட் அணியாவிட்டால் 2000 ரூபாய் தண்டம் விதிக்கப்படும் என்ற காவல்காவல்துறையின் ஆணையைத் திரும்பப் பெற வேண்டும் என கூறிய சத்தியசீலன் இருசக்கர வண்டியில் வரும் போது அவசரத்திற்கு பின்னால் ஒருவரை ஏற்றி வந்தால் அவர் ஹெல்மெட் அணிய வேண்டும் என்றால் அதை எப்படி ஏற்க முடியும் என கேள்வி எழுப்பினார்.

Right Menu Icon