அரசு கலை, அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கை விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு..!
தமிழகத்தில் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் மே 24ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024 – 25 ஆம் ஆண்டிற்கான இளநிலை பட்டப்படிப்பு முதலாம் ஆண்டு பட்டப்படிப்பு சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு கடந்த 6ம் தேதி தொடங்கியது. இன்றைய இணையதளம் வாயிலாக மாணவர்கள் விண்ணப்பித்து வந்தனர்.
தமிழகத்தில் அரசு, கலை அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பிப்பதற்காக கால அவகாசம் நேற்றுடன் நிறைவடைவதாக இருந்த நிலையில் கால அவகாசம் வரும் 24ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று கல்லூரி கல்வி இயக்கம் அறிவித்துள்ளது.





