--- --:--:-- --

வெடிக்கும் ஸ்மார்ட்போன்கள்..! – தடுப்பது எப்படி ?

4

ஒடிசா மாநிலத்தின் புவனேஸ்வர் பகுதியை சேர்ந்த குணா பிரதான் என்ற இளைஞர் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவில் தூங்குவதற்கு முன்பு செல்போன் பயன்படுத்திவிட்டு தலைக்கு அருகே சார்ஜ் போட்டு தூங்கியுள்ளார். அதிக சூடான செல்போன் வெடித்து சிதறியது.

 

செல்போனுக்கு அருகிலேயே குணா தலையை வைத்து தூங்கியதால் அவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுபோன்று இந்தியா உட்பட உலகம் முழுவதும் அடிக்கடி பல சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றன.

 

தற்போதைய காலகட்டத்தில் செல்போன்கள் இல்லாதவர்களை கண்டால் அதிர்ச்சியடைவோம். ஏனென்றால் சிட்டு முதல் பட்டிதொட்டி வரை செல்போன்கள் ஆதிக்கம் செய்கிறது. இளைஞர்களை பொறுத்த வரையில் ஸ்மார்ட்போன் இல்லாதவர்களை காண்பது அரிது. அதிலும் வாட்ஸ்அப், ஃபேஸ்புக் பயன்படுத்தாமல் இருப்பவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்.

 

கடந்த சில ஆண்டுகளில் இந்தியாவில் ஸ்மார்ட்போன்களின் வளர்ச்சி வானைத் தொடும் அளவிற்கு உயர்ந்துள்ளது. நாளுக்கு நாள் புதிய வசதிகளுடன் தொடர்ந்து ஸ்மார்ட்போன்கள் வெளிவந்து கொண்டே தான் இருக்கின்றன. அதேபோன்று செல்போன் வெடிக்கும் சம்பவங்களும் ஓயாமல் அரங்கேறுகின்றன.

 

ஹோட்டலில் சாப்பிடும் போது செல்போன் வெடித்தது, பைக் ஓட்டும்போது செல்போன் வெடித்தது, தூங்கும் போது செல்போன் வெடித்தது இவ்வாறு விதவிதமாக செல்போன்கள் வெடிப்பதை அவ்வப்போது செய்திகளில் காணமுடிகிறது.சில நேரங்களில் செல்போன் வெடித்து உயிரிழப்புகளும் ஏற்படுகிறது. இதனால் செல்போன்கள் மீது ஒருவிதமான அச்சம் மக்களுக்குள் இருந்து கொண்டுதான் இருக்கிறது.

 

அதிலும் எந்நேரமும் செல்போன்களுடன்டன் இருப்பவர்களுக்கு அந்த அச்சம் சற்று அதிகமாகவே உள்ளது. இந்தியாவில் நாள்தோறும் சுமார் 20க்கும் மேற்பட்ட செல்போன்கள் வெடித்து சிதறுவதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது. இதில் பெரும்பாலானவை ஸ்மார்ட்போன்கள் தான். செல்போனை சார்ஜ் போட்டுக்கொண்டு அழைப்புகளை பேசுவதால் வெடிக்கிறது என்று கருத்து அனைவரது மத்தியிலும் பொதுவாக காணப்படுகிறது.

 

அது உண்மைதான் என்றாலும், பின்னர் எப்படி பைக்கில் செல்லும்போதோ அல்லது வேறு இடங்களிலோ செல்போன்கள் வெடிக்கின்றன என்ற கேள்வியையும் அனைவரது மத்தியிலும் உள்ளது. செல்போன்களில் வெடிக்கக்கூடிய ஒரே சாதனம் பேட்டரி தான். அது வெடிக்கும் போதுதான் செல்போன் மொத்தமாக வெடித்து சிதறுகிறது என்பது அனைவரும் அறிந்ததே.

 

இதற்கு முக்கிய காரணம் என்ன தெரியுமா ? உங்கள் போனின் சார்ஜரை கொண்டு சார்ஜ் போடாமல் பிறரின் செல்போன் சார்ஜர் பயன்படுத்துவதாகும். அது எப்படி எல்லாமே ஒரே பின் கொண்ட ஜார்ஜ் தானே என்று நினைக்கலாம். ஆனால் பேட்டரியின் திறன் அனைத்தும் போன்களிலும் ஒன்று இல்லையே ஒவ்வொரு போனிலும் பேட்டரி திறன் மாறுபடுகின்றன.

 

அதன் திறனுக்கு ஏற்றவாறு ஓல்ட் மதிப்பு கொண்ட ஜார்ஜர்களே போனுடன் வழங்கப்படுகின்றன. அந்த ஒரிஜினல் சார்ஜர்களை பயன்படுத்தும்போது பேட்டரியின் வெப்பநிலையில் தாக்கம் ஏற்படுவதில்லை. ஆனால் குறைந்த திறன் கொண்ட பேட்டரிக்கு அதிக வோல்ட் கொண்ட சார்ஜரை பயன்படுத்தும்போது அந்த பேட்டரி பருமன் அடைகிறது.

 

அதன் திறனில் நிலையற்ற தன்மை ஏற்படுகிறது. இதனால் உங்கள் போனில் நீண்ட நேரம் சார்ஜ் நிற்காத நிலை உண்டாகலாம். இதனால் நீங்கள் நீண்ட நேரம் சார்ஜ் போட்டு வைத்து இருப்பீர்கள். பின்னர் இந்த நிலையற்ற தன்மையால் ஒருநாள் உங்கள் போன் எந்த நேரத்திலும் வெடித்து சிதறும். அதனால் இனிமேல் உங்கள் போனுக்கு சரியான சார்ஜரை பயன்படுத்துங்கள் பேட்டரிகள் வெடிப்பதை தவிருங்கள்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon