கூடுதல் கட்டணம் வசூலித்த பள்ளிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து விளக்கம்..!
கூடுதல் கட்டணம் வசூலித்த தனியார் பள்ளிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து விளக்கம் அளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பள்ளி கட்டணம் கட்ட தடை விதித்து தமிழக அரசு உத்தரவை தளர்த்த கோரி பள்ளிகள் சங்கம் சார்பில் தொடரப்பட்ட வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது பள்ளிகளில் முதல் தவணையில் 40 விழுக்காடு கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டுமென்ற தங்கள் உத்தரவு மீறப்பட்டது குறித்து நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். பின்னர் 40 சதவீதத்திற்கும் அதிகமாக கட்டணம் வசூலித்த பள்ளிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து செப்டம்பர் 7ஆம் தேதிக்கு காணொளி ஆஜராகி விளக்கம் அளிக்க பள்ளி கல்வித்துறை செயலாளருக்கு உத்தரவிட்டார்.
அதேபோல சிபிஎஸ்சி மண்டல இயக்குனரும், கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவது குறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.







