ரஷ்யாவுக்கு தடை விதிக்க ஐரோப்பிய நாடுகள் முடிவு..!
யுத்த நடவடிக்கை மேற்கொண்டு வரும் ரஷ்யாவுக்கு எதிராக பல்வேறு தடைகளை விதிக்க ஐரோப்பிய நாடுகள் முடிவு செய்திருககின்றன. உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யாவுக்கு ஐரோப்பிய நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
அங்குள்ள வங்கிகளின் கிளைகளை மூட ஐரோப்பிய மத்திய வங்கி உத்தரவிட்டுள்ளது. இதனால் கடுமையான நெருக்கடி ஏற்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஐரோப்பிய நாடுகளில் உள்ள துறைமுகங்களில் கப்பல்களுக்கும் அனுமதி மறுப்பது முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.







