ஈரோடு இடைத்தேர்தல் : நாம் தமிழர் கட்சி வேட்பாளருக்கு சிக்கல்
ஈரோடு கிழக்கு தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா மீது விதிமுறைகளை மீறியதாக காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 20ஆம் தேதி உரிய அனுமதி பெறாமல் ஆலமர தெருவில் பரப்புரை மேற்கொண்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா மற்றும் 30 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.






