சாமானியர்களுக்கு ஆங்கிலம் புரியுமா? விவசாயிகளுக்கு புரிந்த மொழியில் பேசுங்க – முதலமைச்சர் நிதிஷ்குமார்
பீகாரில் வேளாண் ஆலோசனையில் ஆலோசனையை ஆங்கிலத்தில் வழங்கியவரை அம்மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் கடிந்து கொண்டார். பாட்னாவில் நடந்த வேளாண் தொடர்பான நிகழ்ச்சியில் ஆலோசனைகளை வழங்க நிகழ்ச்சி பங்கேற்பாளர் மேடையேறினார்.
அப்பொழுது ஆங்கிலத்தில் அவர் பேசிய பொழுது விழா மேடையில் அமர்ந்திருந்த மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் ஆங்கிலத்தில் பேசுவதை தவிர்க்குமாறு கேட்டுக் கொண்டார் சாமானிய மக்கள் தான் விவசாயிகள் விவசாயத்தில் ஈடுபடுகிறார்கள் என்பதால் ஆங்கிலத்தில் ஆலோசனைகளை வழங்கினார்.
அவர்களுக்கு எப்படி புரியும் என கேள்வி எழுப்பினார். மேலும் இது இந்தியா என்பதை மறந்து விடக்கூடாது என்று நிதீஷ்குமார் கூறினார்.






