விவசாயிகளுக்கு ஆதரவாக துணை நிற்கும் ஈபிஎஸ்..!
விவசாயிகளின் விருப்பத்திற்கு மாறாக விளை நிலங்களை கையகப்படுத்தும் அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக வேளாண் பெருமக்களுக்கு ஆதரவாக அதிமுக என்றென்றும் துணை நிற்கும் என எதிர் கட்சி தலைவர் பழனிசாமி கூறியுள்ளார்.
அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் அன்னூர், மேட்டுப்பாளையம் வட்டங்களில் உள்ள விவசாயிகளின் விருப்பமில்லாமல் வேளாண் நிலங்களை கையகப்படுத்த மாட்டோம் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டிருப்பதை சுட்டிக்காட்டியுள்ளார்.
இது அன்னூர் பகுதி விவசாயிகளுக்கும் , அதிமுகவிற்கும் கிடைத்த வெற்றி எனக் கூறியுள்ள பழனிசாமி விவசாயிகளின் விருப்பத்திற்கு மாறாக வேளாண் நிலங்களை கையகப்படுத்தும் முயற்சியில் அரசு ஈடுபடக்கூடாது என்றும் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு ஆதரவாக அதிமுக என்றென்றும் துணை நிற்கும் என்றும் கூறியுள்ளார்.





