--- --:--:-- --

அதிமுக வேட்பாளர்கள் யார் யார்? ஓபிஎஸ், ஈபிஎஸ் மீண்டும் ஆலோசனை

EPS OPS 02

அதிமுக வேட்பாளர் பட்டியல் குறித்து, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.

 

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான அதிமுக கூட்டணியில், பாமகவுக்கு 23 தொகுதிகளும் பாஜகவுக்கு 20 தொகுதிகளும் வழங்கப்பட்டுள்ளன. தேமுதிக, த.மா.கா ஆகிய கட்சிகளுடனான பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிக்கிறது. தேமுதிக முதலில் 41, பின்னர் 35 அதை தொடர்ந்து 23 தொகுதிகள் வரை இறங்கி வந்துள்ளது. ஆனால், அதிமுக தரப்பு அதை ஏற்கவில்லை; 15 – 16 தொகுதிகள் மட்டுமே தரப்படும் என்று திட்டவட்டமாக தெரிவித்து வருகிறது. இதனால், இரு கட்சிகளுக்கும் இடையே தொகுதிப் பங்கீடு செய்து கொள்வது தொடர்பாக, கடந்த 10 நாட்களுக்கு மேலாக இழுபறி நீடித்து வருகிறது.

 

இந்நிலையில், தொகுதி உடன்பாடு இழுபறி மற்றும் அதிமுக வேட்பாளர்கள் தேர்வு குறித்து, சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமையகத்தில் ஓபிஎஸ்- ஈபிஎஸ் இருவரும் ஆலோசனை நடத்தியுள்ளனர். அதிமுகவின் வேட்பாளர் பட்டியல் இறுதி செய்வது, தேர்தல் அறிக்கை வெளியீடு, பிரசார பயணத் திட்டம் உள்ளிட்டவை குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.

 

அனேகமாக இன்று அல்லது நாளைக்குள் அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் இறுதி செய்யப்பட்டு, வரும் புதன்கிழமைக்குள் அனைத்து வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட அதிமுக தலைமை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன் பின்னர் தலைவர்கள் தங்களது தொகுதிகளில் தீவிர பிரசாரம் செய்யவுள்ளனர்.

 

அதிமுக வேட்பாளர் தேர்வு தொடர்பாக ஓ.பி.எஸ் மற்றும் ஈ.பி.எஸ். இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இன்று காலை இருவருமே தனித்தனியே ஆலோசனை நடத்தி வந்தனர். தத்தமது ஆதரவாளர்களுக்கு இடங்களை பெறுவதில் இருவரும் விட்டுக் கொடுக்காமல் இருந்ததால், மூத்த நிர்வாகிகளும், கட்சி தொண்டர்களும் கவலையடைந்தனர். இந்த சூழலில் மாலையில் இருவரும் நேரடியாக ஒருவருக்கொருவர் ஆலோசனை நடத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Right Menu Icon