கர்ப்பிணி பசுவின் வயிற்றில் இருந்து எடுக்கப்பட்ட 71 கிலோ பிளாஸ்டிக்…!
கடந்த பிப்ரவரி மாதம் ஹரியானா மாநிலத்தில் சாலை விபத்தில் சிக்கிய கர்ப்பிணி பசு ஒன்றின் வயிற்றில் இருந்து 71 கிலோ பிளாஸ்டிக் எடுக்கப்பட்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அரசாங்கம் பல சட்டங்களை பிறப்பித்த போதும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு குறைந்ததாக இல்லை.
குறைந்த விலையில் வர்ண நிறங்களில் விற்கப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் என்னதான் பார்க்க அழகாக இருந்தாலும் நம் பூமித்தாயை மலடாக்கி விடுகிறது. தெருவில் குப்பை தொட்டி இருக்கும் இடத்தை ஒரு கிலோமீட்டர் தூரத்தில் இருந்தே கண்டுபிடித்துவிடலாம்.
குப்பைத் தொட்டிக்குள் இருக்கும் குப்பையை விட அதனை சுற்றி இருக்கும் குப்பைகள் தான் அதிகம். இவ்வாறு மனிதர்கள் அலட்சியமாக செயல்படுவதால் பசியோடு இருக்கும் பல கால்நடைகள் குப்பைத் தொட்டிகளில் இருக்கும் உணவை உண்ணும்போது பிளாஸ்டிக் கவர்களையும் உண்டு விடுகின்றன.
ஹரியானா மாநிலம் பரீதாபாத்தில் சாலையில் விபத்தில் கர்ப்பிணி பசு ஒன்று சிக்கி விபத்திற்குள்ளானது. அதனை அனிமல்ஸ் டிரஸ்ட் என்ற அமைப்பின் உதவியுடன் அந்த பசுவிற்கு கால்நடை மருத்துவர்கள் பிப்ரவரி 21ஆம் தேதி சிகிச்சை அளிக்கின்றனர்.
பசுவிற்கு கருக்கலைப்பு செய்ய முடிவெடுத்த மருத்துவர்கள் அதற்காக தயாராகின. ஆனால் கருக்கலைப்பு மேற்கொண்ட பிறகும் பசுவின் வயிறு உப்பல் ஆகவே காணப்பட்டது.
மேலும் பசுவின் வயிற்றில் அதன் கன்று வளர்வதற்கான இடத்தை பிளாஸ்டிக் ஆக்கிரமித்துக் கொண்டிருந்ததை தொடர்ந்து சோதனை செய்த மருத்துவர்கள் பசுவின் வயிற்றில் பிளாஸ்டிக் பைகள், கவர்கள் போன்றவை இருப்பதை கண்டுள்ளனர். 4 மணி நேரம் போராடி சிகிச்சையின் மூலம் அதனை வெளியில் எடுத்த மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.





