70 ஆண்டுகால மகாராணியாக ஆட்சிபுரிந்த எலிசபெத் காலமானார்..!
பிரிட்டன் வரலாற்றில் 70 ஆண்டுகால மகாராணியாக ஆட்சிபுரிந்த எலிசபெத் காலமானார். அவருக்கு வயது 96. உலகின் நீண்ட காலம் ஆட்சி செய்த ராணி என்ற சாதனையைப் படைத்தவர் பிரிட்டன் மகாராணி எலிசபெத். லண்டனில் 1920 யார் ஆம் ஆண்டு ஏப்ரல் 20 ஆம் தேதி பிறந்தவர்.
1952 ஆம் ஆண்டு மன்னர் ஆறாம் ஜார்ஜ் மறைந்த பிறகு அரசு பதவிக்கு வந்தார். இரண்டாம் உலகப்போர் காலகட்டத்தில் இருந்த வின்ஸ்டன் சர்ச்சில் தொடங்கி 15 பிரதமர்களை நியமித்திருக்கிறார். விக்டோரியா மகாராணியின் 63 ஆண்டு கால சாதனையை முறியடிக்க 70 ஆண்டுகள் அறையை அலங்கரித்து வந்த எலிசபெத்திற்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
அரண்மனையில் அவருக்கு அதிகாரப்பூர்வ மருத்துவக்குழுவினர் சிகிச்சை அளித்து வந்த நிலையில் மகாராணியின் உயிர் அமைதியான முறையில் பிரிந்ததாக அரண்மனை அறிவித்துள்ளது.





