மின்வேலியில் சிக்கி யானை உயிரிழப்பு..!
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே மின்வேலியில் சிக்கி யானை உயிரிழந்தது தொடர்பாக வனத்துறை அதிகாரிகள் 4 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 24ஆம் தேதி கொளத்தூர் அருகே கரடி தோட்டம் பகுதியை சேர்ந்த புஷ்பநாதன் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் அமைக்கப்பட்டிருந்த மின் வேலியில் சிக்கி 35 வயது மதிக்கத்தக்க ஆண் யானை அந்த யானை உயிர் வனத்துறையினரின் அலட்சியமே காரணம் என குற்றச்சாட்டு எழுந்ததால் மேட்டூர் வனச்சரகர் அறிவழகன், ரகுநாத், வனக்காவலர் சக்திவேல் உள்ளிட்ட 4 பேரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.





