--- --:--:-- --

விதிகளை மீறிய ராகுல்காந்தி! வில்லங்கமானது நெல்லை பிரசாரம்!!

rahul nellai

திருநெல்வேலி டவுன் பகுதியில் காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி, அனுமதியின்றி பிரசாரம் செய்ததாக சர்ச்சை எழுந்துள்ளது; இது தொடர்பாக அவர் மீது துணை வட்டாட்சியர் புகார் அளித்திருப்பது, பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

 

தமிழக சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால், அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. அதிமுக – திமுக தலைவர்கள் மட்டுமின்றி தேசிய கட்சிகளான பாஜக, காங்கிரஸ் கட்சி தலைவர்களும் தமிழகத்திற்கு படையெடுத்து, தீவிர பிரசாரத்தை தொடங்கிவிட்டனர். உள்துறை அமைச்சர் அமித்ஷா, விழுப்புரம், காரைக்கால் பகுதிகளில் பாஜகவுக்கு ஆதரவாக நேற்று தேர்தல் பிரசாரம் செய்தார்.

 

இதோபோல் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியும், அக்கட்சிக்கு ஆதரவாக தூத்துக்குடி, நெல்லை, குமரி மாவட்டங்களில் பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார். தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி, முத்தையாபுரம், முக்காணி, சாத்தான்குளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்குச் சென்ற ராகுல் காந்தி, அங்குள்ள மக்களை சந்தித்து பிரச்சாரம் செய்தார்.

 

நேற்று, திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே நடந்த காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் ராகுல் பங்கேற்றார். பின்னர், நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள செயிண்ட் சேவியர்ஸ் கல்லூரியில் பேராசிரியர்களுடன் ராகுல் கலந்துரையாடினார். அதை தொடர்ந்து, நெல்லை டவுன் பகுதியில், நெல்லையப்பர் கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்தா ராகுல், பிற்பகலில் தென்காசி மாவட்டத்தில் வாக்கு சேகரித்தார்.

 

இந்நிலையில், நேற்று நெல்லை டவுன் பகுதியில் ராகுல்காந்தி பிரசாரம் செய்தது, சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது. அவர் அங்கு அனுமதியின்றி பிரசாரம் மேற்கொண்டதாக துணை வட்டாட்சியர் விஜயா புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக, திருநெல்வேலி மாநகர காங்கிரஸ் தலைவர் சங்கர பாண்டியன் உள்ளிட்ட காங்கிரஸ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ராகுலின் நெல்லை பிரசாரத்தி தேர்தல் விதிமீறல் என்ற குற்றச்சாட்டு எழுந்திருப்பதும், அது தொடர்பாக வழக்கு பதியப்பட்டுள்ளதும், அரசியல் வட்டாரங்களில் முக்கியத்தும் பெறுகிறது.

Leave a Reply

Right Menu Icon