--- --:--:-- --

இன்று சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார் எடப்பாடி பழனிசாமி..!

2

மிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், இப்போதே, அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ச்சியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுமக்களையும், கட்சி நிர்வாகிகளையும் சந்தித்து வருகிறார்.

 

மேலும் ஓரணியில் தமிழ்நாடு என்ற பெயரில் தீவிர உறுப்பினர் சேர்க்கையையும் திமுக நடத்தி வருகிறது. இதேபோல, பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவும் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் தேர்தலை சந்திக்கவிருக்கிறது. பூத் கமிட்டி அமைக்கும் பணிகளை தீவிரப்படுத்திய அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ஒரு சில மாவட்ட செயலாளர்களை மாற்றியுள்ளார்.

 

மேலும் முக்கிய நிகழ்வாக தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் ‘மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் சுற்றுப்பயணத்தையும் தொடங்குகிறார்.கோயம்புத்தூர் மாவட்டத்தின் மேட்டுப்பாளையம் தொகுதியிலிருந்து இன்று சுற்றுப்பயணத்தை தொடங்கும் எடப்பாடி பழனிசாமி, 23 ஆம் தேதி தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் நிறைவு செய்கிறார்.

 

இந்த சுற்றுப்பயணத்தின் போது, தமிழ்நாட்டில் நிலவும் சட்டம் ஒழுங்கு பிரச்னைகள், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாதது, விலைவாசி உயர்வு, திமுக அரசு நிறுத்திவைத்த அதிமுக ஆட்சிக்கால திட்டங்கள், ஆகியவற்றை சுட்டிக்காட்டி ஈபிஎஸ் பேசுவார் எனத் தெரிகிறது. இவைதவிர 2021 தேர்தலின் போது, திமுக அளித்த வாக்குறுதிகளில் மாவட்டம் மற்றும் சட்டப்பேரவை வாரியாக நிறைவேற்றாதது குறித்தும் பொதுமக்களிடம் எடப்பாடி பழனிசாமி விளக்குவார் எனக் கூறப்படுகிறது.

 

Right Menu Icon