--- --:--:-- --

இமாச்சலப் பிரதேசத்தில் இறைச்சி சாப்பிடுவதால் இயற்கை பேரிடர்கள்..!

3

றைச்சி சாப்பிடுவதால் தான் ஹிமாச்சல பிரதேசத்தில் இயற்கை பேரிடர்கள் நிகழ்வதாக ஐஐடி மண்டி இயக்குனர் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 

இமாச்சல பிரதேசத்தில் அண்மையில் பெய்த கனமழை காரணமாக ஆங்காங்கே வெள்ளப்பெருக்கும் நிலச்சரிவுகளும் ஏற்பட்டன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் ஐஐடி மண்டி இயக்குனர் லட்சுமி என்பவர் தனது மாணவர்களை இறைச்சி சாப்பிடுவதை நிறுத்துமாறு அறிவுறுத்தியுள்ளார். வளர்ப்பு பிராணிகளை கொடூரமாக கொன்று அதன் இறைச்சியை உண்பதால் தான் மீண்டும் மீண்டும் விமாச்சல பிரதேசத்தில் இயற்கை பேரிடர்கள் நிகழ்வதாகவும் பேசியிருக்கிறார்.

 

இது சமூக வலைதளங்களில் பரவி பெரும் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் நாட்டின் மிக உயரிய கல்வி நிறுவனத்தின் இயக்குனராக பணியாற்றும் தகுதியை அவர் இழந்துவிட்டதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெயராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

 

சமூக வலைதளத்தில் இதுகுறித்து பதிவிட்டு இருக்கும் ஜெய்ராம் ரமேஷ் ஐஐடி மண்டி இயக்குனராக அவர் தொடர்ந்து பணியாற்றினார். அறிவியலை அறிந்து கொள்ள வரும் மாணவர்களின் ஆர்வத்தை சிதைத்து விடும் என்றும் கூறுகிறார்.

 

Right Menu Icon