நடிகை ஜெயபாரதி வீட்டில் நகையை திருடிய ஓட்டுனர் மற்றும் பணியாளர்!
சென்னையில் நடிகை ஜெயபாரதி வீட்டில் நகை திருடிய பணியாளர் மற்றும் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளனர். அலாவுதீனும் அற்புத விலக்கும் திரைப்ப
டத்தில் நடிகர் கமலுக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை ஜெயபாரதி. ரஜினிகாந்த் நடித்த முத்து, மைக்கேல், மதன காமராஜன் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
தற்போது சென்னை நுங்கம்பாக்கத்தில் வசித்து வருகிறார். நடிகை ஜெயபாரதியின் வீட்டில் கடந்த ஓராண்டிற்கு மேலாக நேபாளத்தை சேர்ந்த ஹர்க்பதூர் என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் வைக்கப்பட்டிருந்த 31 சவரன் நகைகள் மாயமானதால் அதிர்ச்சியடைந்த நடிகை ஜெயபாரதி நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
விசாரணையில் தாயார் கார் ஓட்டுநரான இப்ராகிம் பணியாளர் ஹர்க்பதூருடன் இணைந்து நடிகை ஜெயபாரதியின் வீட்டில் நகைகளை கொள்ளையடித்தது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து இருவரையும் கைது செய்த காவல்துறையினர் 31 சவரன் நகைகளையும் பறிமுதல் செய்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




