--- --:--:-- --

குடிநீர் குழாய் உடைப்பு.. ஒரு மாதமாக வீணாகும் குடிநீர்..!

9

சேலத்தில் காவிரி குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் கால்வாய் கலந்து வருவதால் மக்கள் கவலை அடைந்துள்ளனர். சேலம் மாவட்டம் சங்ககிரி பேருந்து நிலையத்தில் செல்லும் காவிரி குடிநீர் குழாய் உடைந்து கடந்த ஒரு மாதமாக குடிநீர் வீணாகி வருகிறது.

 

இதனால் சுற்றுவட்டார பகுதி மக்களுக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. இது குறித்து அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என அந்த பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

 

மேலும் தண்ணீர் வீணாகி கால்வாயில் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

 

Right Menu Icon