--- --:--:-- --

அதிரடியாக குறைந்த தங்கம் விலை..!

9

ப்ரல் மாதம் தொடக்கம் முதலே தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது.நேற்று ஏப்ரல் 21 ஆம் தேதி தங்கம் விலையில் மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று விலை குறைந்துள்ளது.

 

அதன்படி இன்று ஏப்ரல் 22 ஆம் தேதி 22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.40 குறைந்து ஒரு கிராம் ரூ.6,845-க்கும், சவரனுக்கு ரூ.320 குறைந்து ஒரு சவரன் ரூ.54,760-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

 

இதே போன்று 18 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.33 குறைந்து ஒரு கிராம் ரூ.5,607-க்கும், சவரனுக்கு ரூ.264 குறைந்து ஒரு சவரன் ரூ.44,856-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 குறைந்து ஒரு கிராம் ரூ.89-க்கும் ஒரு கிலோ ரூ.89,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Right Menu Icon