--- --:--:-- --

150 இடங்களுக்கு மேல் பாஜக வெற்றி பெறாது – ராகுல் காந்தி

10

150 இடங்களுக்கு மேல் பாஜக வெற்றி பெறாது என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். பிகாரின் பாகல்பூரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, 400 இடங்களுக்கு மேல் வெற்றிபெறுவோம் என பாஜக தொடர்ந்து கூறி வருகின்றது என்றும் ஆனால், 150 இடங்களுக்கு மேல் பாஜகவினர் வெற்றி பெற மாட்டார்கள் எனவும் தெரிவித்தார்.

 

’இந்தியா’ கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்தவுடன் அக்னிவீரர் திட்டத்தை முடிவுக்குக் கொண்டு வருவோம் என்று கூறிய ராகுல்காந்தி, அனைவருக்கும் ஓய்வூதியம் கிடைக்க வழிவகை செய்வோம் என்றும் ஆஷா மற்றும் அங்கன்வாடி பணியாளர்களின் சம்பளத்தை இரட்டிப்பு ஆக்குவோம் எனவும் தெரிவித்தார்.

 

 

விவசாயிகளுக்கு 2 உத்தரவாதங்களை அளிப்பதாக கூறிய ராகுல்காந்தி, விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்றும, விவசாயிகளுக்கு குறைந்த பட்ச ஆதரவு விலை வழங்குவோம் எனவும் தெரிவித்தார்.

 

Right Menu Icon