--- --:--:-- --

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டதாக வீண் புரளிகளை கிளப்ப வேண்டாம் – முதலமைச்சர்

1

மிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை தொடர்பாக சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்ட அதிமுகவினருக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். சட்டப்பேரவையில், நேரமில்லா நேரத்தில் தமிழ்நாடு சட்டம் – ஒழுங்கு பிரச்சினை தொடர்பாகவும், மதுரை உசிலம்பட்டி காவலர் கொலை தொடர்பாகவும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.

 

அப்போது, கவன ஈர்ப்பு தீர்மானம் முறையாகக் கொடுத்தால் மட்டுமே விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என்று அவை முன்னவர் துரைமுருகன் தெரிவித்தார். இதையடுத்து, சட்டப்பேரவையின் நேரமில்லா நேரத்தில் பேச வேண்டிய பொருள் குறித்து பேரவைத் தலைவரிடம் அவை தொடங்குவதற்கு 30 நிமிடம் முன்பாகத் தெரிவிக்க வேண்டும் என்பது மரபு எனக் கூறிய சபாநாயகர் அப்பாவு, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானம் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படாது என்றார்.

 

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக எம்எல்ஏக்கள், சபாநாயகர் அருகில் அமளியில் ஈடுபட்டனர்.அப்போது பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், பேரவையில் 30 நிமிடங்களுக்கு முன்பாகப் பேச வேண்டிய பொருள் குறித்துத் தெரிவிப்பது மரபு என்றும் எதிர்க்கட்சியினர் நினைத்ததை எல்லாம் பேச அனுமதிக்க முடியாது என்றார்.

 

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக எம்எல்ஏக்கள் மீண்டும் அமளியில் ஈடுபட்டனர். இந்நிலையில், அவையில் திட்டமிட்டு குழப்பத்தை ஏற்படுத்த முயற்சித்ததாக அதிமுக எம்எல்ஏக்களை நாள் முழுவதும் சஸ்பெண்ட் செய்த சபாநாயகர் அப்பாவு அனைவரையும் வெளியேற்ற உத்தரவிட்டார்.

Right Menu Icon