ஊருக்குள் வர வேண்டாம்.. முதல்வரின் மகனை வழிமறித்த மக்கள்..!
கர்நாடக முதல்வர் சித்தராமய்யாவின் மகனை அவரது சொந்த தொகுதியில் கிராம மக்கள் வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சாலைகள் மிகவும் மோசமாக உள்ளதால் குற்றம் சாட்டி அவரை கிராம மக்கள் உள்ளே வர அனுமதிக்கவில்லை.
சாலை மேம்பாட்டு பணிகள் முடிக்கவில்லை என கூறி வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். மேலும் ஊருக்குள் வர வேண்டாம் எனக் கூறி முழக்கங்களை எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி பொதுமக்களை களைந்து போக செய்தனர்.






