--- --:--:-- --

நந்தா கல்விக் குழுமத்தில் வருமான வரித்துறை சோதனையில் 150 கோடி மதிப்புள்ள ஆவணங்கள் பறிமுதல்..!

4

ரோடு நந்தா கல்வி குழுமத்தில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையில் 150 கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

மாணவர்களிடம் அதிக கட்டணம் வசூலித்து வருமான வரியை குறைத்து காட்டியதாக எழுந்த குற்றச்சாட்டு காரணமாக ஈரோடு நந்தா கல்வி குழுமத்திற்கு சொந்தமான கல்லூரிகள், அலுவலகங்கள், பண்ணை வீடு உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

 

சென்னை, கோவை மற்றும் சேலத்தில் இருந்து வந்த 80-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் குழுக்களாக விடிய விடிய சோதனை நடத்தினர். சோதனையில் 150 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து ஆவணங்களும், 5 கோடி ரூபாய் ரொக்க பணமும் கைப்பற்றியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon