--- --:--:-- --

முகக்கவசம் இல்லாததால் தலைகவசம் அணிந்து பணிபுரியும் மருத்துவர்கள்..!

5

இந்தியாவில் கொரொனா பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை எடுத்து வரும் மருத்துவர்கள் பல பகுதிகளில் முறையான பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் பணிபுரிந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நாட்டின் பல பகுதிகளில் முக கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது.

 

குறிப்பாக அல்லும் பகலும் போராடி வரும் மருத்துவர்களுக்கு முறையான பாதுகாப்பு உபகரணங்கள் கிடைப்பதில்லை என்று புகார் தெரிவிக்கப்படுகிறது. கொல்கத்தாவில் உள்ள மருத்துவர்கள் நெகிழியால் செய்யப்பட்ட ரெயின்கோட் அணிந்து பணிபுரியும் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

 

ஹரியானா மாநிலத்தில் 850 கவசத்திற்கு தட்டுப்பாடு இருப்பதால் மருத்துவர் ஒருவர் தலைக்கவசம் அணிந்து வேலை செய்ததாக கூறப்படுகிறது. மேலும் மருத்துவர்கள் தங்களது சொந்த செலவில் பாதுகாப்பு உபகரணங்களை வாங்க முற்பட்டாலும் அவை கிடைப்பதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

முக கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் சீனா, தென் கொரியா ஆகிய நாடுகளிலிருந்து தேவையான அளவு இறக்குமதி செய்யப்படும் என மத்திய அரசு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon